கோலியை போன்று ரோகித் சர்மாவிற்கும் தற்காலிக ஓய்வு தேவையா ? - ரவி சாஸ்திரி பதில்

14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத ரோகித் 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

Update: 2022-05-22 17:19 GMT

Image Courtesy : BCCI / IPL 

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி நிறைவு செய்தது. 5 முறை சாம்பியன் ஆன மும்பை அணி இதுவரை கண்டிராத அளவுக்கு மோசமான ஆட்டத்தை இந்த ஆண்டு வெளிப்படுத்தியது.

அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்க்கப்பட்டது. 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

கோலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவரை தற்காலியாக ஓய்வு எடுக்க கூறி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவிற்கும் அதுபோன்ற ஓய்வு தேவையா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், " ரோகித்துக்கு ஓய்வு தேவையில்லை என்று நினைக்கிறேன். விராட் விஷயத்தில் அவர் 1 முதல் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில்லாமல் விளையாடுகிறார். ரோகித்தை பொறுத்தவரை அவர் இடைவேளை எடுத்து கொள்கிறார்.

கடந்த முறை அவர் தென்னாப்பிரிக்கா செல்லவில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பாதியை அவர் தவறவிட்டார். ரோஹித்துக்கு இங்கிலாந்து செல்வதற்கு முன் 10-14 நாட்களுக்கு வரை அவருக்கு ஓய்வு கிடைக்கும்." என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்