கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு...!
பேட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தன.
அதன்படி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர் வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதுகள்: ஓஜஸ் பிரவின் (வில்வித்தை), அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), முரளி ஸ்ரீசங்கர் (தடகளம்), பருல் சவுத்ரி (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர் வைஷாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்), திக்ஷா தாகர் (கோல்ப்), கிரிஷன் பகதூர் பதக் (ஆக்கி), சுசீலா சானு (ஆக்கி), பவன் குமார் (கபடி), ரிது நேகி (கபடி), நஸ்ரீன் (கோ-கோ), பிங்கி (புல்வெளி பந்துகள்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சூடு), இஷா சிங் (துப்பாக்கி சூடு), ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்), அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார் (மல்யுத்தம்), ஆன்டிம் (மல்யுத்தம்), ரோஷிபினா தேவி ( வுஷு), ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை), இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்).
மேலும் பேட்மிண்டன் வீரர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.