ஐ.பி.எல்.: பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 14 ஓவரில் 121 ரன்கள் சேர்ப்பு
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 14 ஓவரில் 121 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை,
17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை வெற்றிபெற 36 பந்துகளில் 53 ரன்கள் தேவை. ஷிவம் துபே 6 ரன்னிலும், ஜடேஜா 10 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.