ஆசிய விளையாட்டு; கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை..!!

ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதி முடிவடைகிறது.

Update: 2023-09-19 09:08 GMT

image courtesy; AFP

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23ம் தேதி தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.

 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றில் களம் இறங்க உள்ளன.

இதில் இந்திய ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் பெண்கள் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்களுக்கான போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதி முடிவடைய உள்ளது.

பெண்கள் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சீனா மற்றும் ஹாங்காங் அணிகள் விளையாடுகின்றன.

கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை விவரம் பின்வருமாறு;-

பெண்கள் கிரிக்கெட் அட்டவணை

லீக் சுற்று

19/9/2023

 1; ஹாங்காங்-சீனா

 2; நேபாளம்-சிங்கப்பூர்

20/9/2023

 3; இந்தோனேசியா-மலேசியா

 4; முதல் ஆட்டத்தின் வெற்றியாளர்-இரண்டாவது ஆட்டத்தின் வெற்றியாளர்

21/9/2023

 5; யுஏஇ-பூட்டான்

 6; தாய்லாந்து-ஓமன்

காலிறுதி சுற்று 

22/9/2023

 7; இந்தியா- 4-வது ஆட்டத்தின் வெற்றியாளர்

 8; பாகிஸ்தான் - 3-வது ஆட்டத்தின் வெற்றியாளர்

24/9/2023

 9; 3-வது ஆட்டத்தின் வெற்றியாளர்- 4-வது ஆட்டத்தின் வெற்றியாளர்

 10; 4-வது ஆட்டத்தின் வெற்றியாளர்- 5-வது ஆட்டத்தின் வெற்றியாளர்

அரையிறுதி சுற்று

25/9/2023

 11; காலிறுதி முதல் ஆட்டத்தின் வெற்றியாளர்- காலிறுதி 2-வது ஆட்டத்தின் வெற்றியாளர்

 12; காலிறுதி 3-வது ஆட்டத்தின் வெற்றியாளர்- காலிறுதி 4-வது ஆட்டத்தின் வெற்றியாளர்

இறுதிப்போட்டி

26/9/2023

3-வது இடத்திற்கான போட்டி

 13; அரையிறுதி முதல் ஆட்டத்தின் தோல்வியாளர்-அரையிறுதி 2-வது ஆட்டத்தின் தோல்வியாளர்

முதல் இடத்திற்கான போட்டி

 14; அரையிறுதி முதல் ஆட்டத்தின் வெற்றியாளர்-அரையிறுதி 2-வது ஆட்டத்தின் வெற்றியாளர்.

ஆண்கள் கிரிக்கெட் அட்டவணை

லீக் சுற்று

28/9/2023

1 : ஓமன் - சவுதி அரேபியா

 2: ஹாங்காங் - சிங்கப்பூர்

29/9/2023

 3: மலேசியா - பஹ்ரைன்

 4: நேபாளம் - இந்தோனேசியா

30/3/2023

 5: கத்தார் - குவைத்

 6: யுஏஈ - பூடான்

1/10/2023

 7: ஆப்கானிஸ்தான் - சீனா

 8: முதல் ஆட்டத்தின் வெற்றியாளர் -  2 -வது ஆட்டத்தின் வெற்றியாளர்

2/10/2023

 9:  3 -வது ஆட்டத்தின் வெற்றியாளர் -  4 -வது ஆட்டத்தின் வெற்றியாளர்

10: 5 -வது ஆட்டத்தின் வெற்றியாளர் -  6 -வது ஆட்டத்தின் வெற்றியாளர்

காலிறுதி சுற்று

4/10/2023

 11: பாகிஸ்தான் -  8 -வது ஆட்டத்தின் வெற்றியாளர்

 12: இலங்கை -  9 -வது ஆட்டத்தின் வெற்றியாளர்

5/10/2023

 13: வங்காளதேசம் - 10 -வது ஆட்டத்தின் வெற்றியாளர்

 14: இந்தியா -  7 -வது ஆட்டத்தின் வெற்றியாளர்

அரையிறுதி சுற்று

6/10/2023

 15: காலிறுதி முதல் ஆட்டத்தின் வெற்றியாளர் -காலிறுதி 4-வது  ஆட்டத்தின் வெற்றியாளர்

 16: காலிறுதி 2-வது ஆட்டத்தின் வெற்றியாளர் - காலிறுதி 3-வது ஆட்டத்தின் வெற்றியாளர்

இறுதிப்போட்டி

7/10/2023

3-வது இடத்திற்கான போட்டி

17: அரையிறுதி முதல் ஆட்டத்தின் தோல்வியாளர்- அரையிறுதி 2-வது ஆட்டத்தின் தோல்வியாளர்

முதல் இடத்திற்கான போட்டி

 18: அரையிறுதி முதல் ஆட்டத்தின் வெற்றியாளர்-அரையிறுதி 2-வது ஆட்டத்தின் வெற்றியாளர் 

Tags:    

மேலும் செய்திகள்