உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி...டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்...சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா...!

Update:2023-11-19 09:27 IST
Live Updates - Page 5
2023-11-19 08:11 GMT

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரானப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


2023-11-19 07:52 GMT

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை காண கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வருகை தந்துள்ளார்.

2023-11-19 07:48 GMT

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


2023-11-19 07:42 GMT

அகமதாபாத் மைதானத்திற்குள் பேருந்தில் இருந்து இறங்கி என்ட்ரி கொடுத்த இந்திய அணியினரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

2023-11-19 07:04 GMT

அலைகடலென திரண்ட ரசிகர்கள்...!

உலக கோப்பை இறுதிப்போட்டியைக் காண அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளனர். 


2023-11-19 06:36 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் இந்திய அணியின் வெற்றிக்காக ஒன்றிணைவோம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

2023-11-19 06:26 GMT

உலக கோப்பை இறுதிப்போட்டியை காண நடிகை தீபிகா படுகோனே வருகை தந்துள்ளார்.

2023-11-19 06:01 GMT

இந்தியாதான் கோப்பையை வெல்லும் -சச்சின் டெண்டுல்கர்

இந்த நாளுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தோம். இன்று இந்தியாதான் நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

2023-11-19 05:52 GMT

இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற முகமது சமியின் சொந்த ஊரான அம்ரோஹாவில் (உ.பி) கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

2023-11-19 04:51 GMT

உலக கோப்பை இறுதிப்போட்டி நடக்கும் நரேந்திர மோடி மைதானத்தின் முன்பு ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். உலகக் கோப்பை இறுதி போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இறுதிப் போட்டியில் இந்தியா வெல்லும் என்று நான் நம்புகிறேன் என மைதானத்தின் வெளியே இருந்த ரசிகர் ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்