3வது ஒருநாள் போட்டி : இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்ப்பு

3வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்

Update: 2022-12-09 08:51 GMT

மிர்புர்,

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த நிலையில் , வங்காளதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்