ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி திணறல்

பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் திணறி வருகிறது.

Update: 2022-03-14 09:17 GMT
கோப்புப்படம்
கராச்சி, 

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் களமிறங்கியது. அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் குவித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். அவர் 160 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்களும், அலெக்ஸ் கேரி 93 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சைபுதீன் 13 ரன்களிலும், இமாம் உல் ஹாக் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் கேப்டன் பாபர் ஆசம் அணியை சரிவில் இருந்து  மீட்க போராடிவரும் நிலையில், மற்ற பேட்மேன்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். 

பாகிஸ்தான் அணி தற்போதுவரை 34 ஓவர்களில் 82 ரன்னுகு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

மேலும் செய்திகள்