20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்
பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (906 புள்ளி) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார்.;
துபாய்,
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி 20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (906 புள்ளி) மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (836 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.
இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானை (694 புள்ளி) பின்னுக்கு தள்ளி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா (695 புள்ளி) மறுபடியும் முதலிடத்தை அடைந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரத்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் ரஷித் கான் 4 விக்கெட் மட்டுமே எடுத்ததால் 4 புள்ளிகள் குறைந்து முதலிடத்தை இழக்க வேண்டியதாகி விட்டது.