இந்திய மதிப்பில் 15 ரூபாய்... வங்காளதேச டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விலையை அறிவித்த பாகிஸ்தான்

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-08-12 20:04 GMT

image courtesy; AFP

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியிலும், 2வது போட்டி கராச்சியிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான டிக்கெட் விலை பற்றிய விவரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் ஆச்சரியப்படும் வகையில் குறைந்தபட்ச டிக்கெட் விலை வெறும் 50 ரூபாயாக (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் வெறும் 15 ரூபாய் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் - வங்காளதேச டெஸ்ட் தொடரை பார்க்க ரசிகர்கள் அதிகமாக வரமாட்டார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் குளிர்சாதன வசதியுடன் கூடிய உச்சகட்ட டிக்கெட் விலை 2,50,000 பாகிஸ்தான் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் வி.ஐ.பி. டிக்கெட் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே ஞாயிற்றுக்கிழமை போன்ற வார இறுதி நாட்களில் 500 - 600 பாகிஸ்தான் ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்