இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
பவுர்ணமி விரதம். தைப்பூசம். மகிழ்ச்சி பெருக மால்மருகனை வழிபட வேண்டிய நாள்.;
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது வருடம் தை மாதம் 11-ந் தேதி வியாழக்கிழமை.
திதி : பவுர்ணமி திதி இரவு (11.20)க்கு மேல் பிரதமை திதி.
நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம் காலை (8.34)க்கு மேல் பூசம் நட்சத்திரம்.
யோகம் : அமிர்தயோகம்.
ராகுகாலம் : மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள் :
பவுர்ணமி விரதம். தைப்பூசம். மகிழ்ச்சி பெருக மால்மருகனை வழிபட வேண்டிய நாள். மதுரை ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரையிலும் அம்பாள் வெள்ளி சிம்மாசனத்திம் எழுந்தருளி தெப்ப திருவிழா. சென்னை கபாலீஸ்வரர், காஞ்சி பெருந்தேவிவி தெப்பம். மருதமலை, பழனி, தலங்களில் முருகன் தேர். வடலூர் ராமலிங்க சாமிகள் ஜோதி தரிசனம்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் : கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
ரிஷபம் : உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம் : மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோக முயற்சி பலன்தரும்.
கடகம் : அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். ஆக்கப்பூர்வமான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும். சமுதாய நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குலதெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி : செல்வநிலை உயரும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.
துலாம் : சுபச்செலவுகள் ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.வீடுகட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வீடுமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
விருச்சிகம் : ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும்.
தனுசு : நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவோடு பழகுவது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.
மகரம் : சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் : நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் உயரும். பாதியில் நின்றபணி மீதியும் தொடரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த அயல்நாட்டு முயற்சி வெற்றி தரும்.
மீனம் : இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கிடைக்கும் நாள். கூட்டு முயற்சியில் லாபம் உண்டு. பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். விலகிய சொந்தங்கள் விரும்பி வரலாம். வருமானம் திருப்தி தரும்.
சந்திராஷ்டமம்: தனுசு.