இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
செல்வநிலை உயர சிவபெருமானை வழிபட வேண்டிய நாள்.;
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 25 (வெள்ளிக்கிழமை)
திதி: துவாதசி இரவு 9.50 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: திரயோதசி இரவு (7.50) மணி வரை பிறகு சதுர்த்தசி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
மூங்கில்முனை காமாட்சி அம்மன் பெருந்திருவிழா. நந்தி வழிபாடு நன்று. கடம்பூர் சண்முகநாதர் கோவில் பூக்குழி விழா. திருவண்ணாமலை லிங்கோத்பர் தரிசனம். பிரதோஷம், மகா சிவராத்திரி. செல்வநிலை உயர சிவபெருமானை வழிபட வேண்டிய நாள்.
ராசிபலன்
மேஷம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழிலில் விட்டுப்போன புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பண வரவில் இருந்த தடைகள் அகலும்.
ரிஷபம்
யோகமான நாள். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் கூடும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணம் பலன் தரும்.
மிதுனம்
ஆலய வழிபட்டால் அமைதி கிடைக்கும் நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவை விடச் செலவு கூடும்.
கடகம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்தியில் ஈடுபாடு அதிகரிக்கும். பகையொன்று நட்பாகலாம். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிம்மம்
சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம் பூமியால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பிரிய மானவர்களின் சந்திப்பு உண்டு.
கன்னி
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் கிடைக்கும்
துலாம்
பக்கத்திலுள்ளவர்களின் பாச மழையில் நனையும் நாள். பணவரவு திருப்தி தரும். சில தினங்களுக்கு முன்பு எடுத்த ஒருமுயற்சி இப்பொழுது வெற்றி பெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள்.
விருச்சிகம்
செல்வ நிலை உயர சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொட்டது துலங்கும். தனவரவு தாராளமாக வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழில் வெற்றி நடை போடும்.
தனுசு
சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
மகரம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அலுவலகப் பணிகளினால் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். பணம் பைக்கு வந்த நிமிடங்களிலேயே செலவாகும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும்.
மீனம்
மதிப்பும், மரியாதையும் உயரும் புகழ்மிக்கவர்களை சந்தித்து மிகழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளை தொடருவது பற்றி சிந்திப்பீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.