இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

Update: 2023-12-29 03:10 GMT

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-13 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: துவிதியை காலை 8.15 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.42 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருவாய்மொழி உற்சவம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவேடகம் ஏலவார்குழலியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருவாய்மொழி உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் நட்பு கிட்டும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

மிதுனம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும்.

கடகம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர் பகை உருவாகலாம். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம்.

சிம்மம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெற அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.

கன்னி

மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

துலாம்

வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

விருச்சிகம்

வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். தொழிலில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கருத்து மோதல்கள், அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

தனுசு

மாலை நேரம் மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி தாமதமாகும்.

மகரம்

வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றி செய்திகள் விடிகாலையிலேயே கிடைக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதம் நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

மீனம்

இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு. தொழில் வளர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்