அம்மன், பெருமாள் கோவில்களில் நவராத்திரி வழிபாடு

திருவாரூர் மாவட்ட அம்மன், பெருமாள் கோவில்களில் நவராத்திரி வழிபாடு நடந்தது.

Update: 2022-10-01 18:45 GMT

வலங்கைமான்;

திருவாரூர் மாவட்ட அம்மன், பெருமாள் கோவில்களில் நவராத்திரி வழிபாடு நடந்தது.

நவராத்திரி விழா

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் செட்டி தெருவில் வேம்படி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று மகா மாரியம்மனுக்கு தவக்கோலம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.குடவாசல் குபேர சாய் பாபா கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பூஜையில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களான பேனா, பென்சில், நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன

கஸ்தூரி ரங்க பெருமாள் கோவில்

மன்னார்குடி அருகே உள்ள விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சேஷ வாகனத்தில் உற்சவர் ராஜகோபாலசாமி அருள்பாலித்தார். அப்போது அர்ச்சகர்கள் சாமிக்கு துளசி அர்ச்சனை செய்தனர். கோவில் கருவறையில் மூலவராக அருள் பலிக்கும் ரங்கநாயகி தாயார் கஸ்தூரி ரங்க பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதே போல குடவாசல் அருகே உள்ள சித்தாடி காத்தாயி அம்மன் கோவிலில் அம்மன் நவராத்திரியை யொட்டி தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் திருமக்கோட்டை பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்