தகட்டூர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தகட்டூர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2022-12-16 18:45 GMT

வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். சிறப்புமிக்க தகட்டூர் பைரவர் கோவிலில் பைரவரின் அவதார திருநாளையொட்டி நேற்று பைரவருக்கு பால், இளநீர், திருநீறு, நெய், தேன், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்