அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2022-12-18 18:45 GMT

வேதாரண்யம் நகரில் அன்னப்பசாமி கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தையொட்டி சாமிக்கு பல்வேறு திரவியங்கள், பால், இளநீர், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி சன்னதியில் அய்யப்ப சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு 18 படிகளிலும் தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு பஜனை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்