கற்பக விநாயகர், காசிவிசுவநாதர் கோவில் குடமுழுக்கு

கற்பக விநாயகர், காசிவிசுவநாதர் கோவில் குடமுழுக்கு

Update: 2022-06-24 17:31 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வட்டம் நரசிங்கமங்கலம் கிராமத்தில் கற்பக விநாயகர், காசிவிசுவநாதர், விசாலாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி ேநற்றுமுன்தினம் மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாைல பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு விமான குடமுழுக்கும், காலை 10 மணிக்கு மூலஸ்தான குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடவாசல் அருகே உள்ள அனந்தம்புலியூரில் ஆனந்தவள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 22-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து முதல்கால யாக சாலை பூஜையும், நேற்றுமுன்தினம் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று, 10 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்