மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான் - கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

குரு பெயர்ச்சியையொட்டி பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;

Update: 2024-05-01 12:51 GMT

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இன்று மாலை 5.19 மணிக்கு இடம்பெயர்ந்தார். குரு பெயர்ச்சியையொட்டி பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குரு பரிகார கோவில்களில் சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. பல்வேறு ராசிக்காரர்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் காலை முதலே கூட்டம் அலைமோதி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ள நிலையில், குரு பகவான் கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்