சிகார் முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

சிகார் முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

Update: 2022-07-14 14:43 GMT

சிக்கல்

கீழ்வேளூர் தாலுகா சிகார் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 11-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்