இந்த வார விசேஷங்கள்: 13-8-2024 முதல் 19-8-2024 வரை

நாளை மறுநாள் சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

Update: 2024-08-13 05:09 GMT

13-ந்தேதி (செவ்வாய்)

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.

* குரங்கணி முத்து மாலை அம்மன் பவனி

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

14-ந்தேதி (புதன்)

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல்.

* ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க கேடய சப்பரத்தில் பவனி

* இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

15-ந்தேதி (வியாழன்)

* சுமார்த்த ஏகாதசி.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்,

* சமநோக்கு நாள்.

16-ந்தேதி (வெள்ளி)

* சர்வ ஏகாதசி.

* வரலட்சுமி விரதம்.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய விலை.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

* கீழ்நோக்கு நாள்.

17-ந்தேதி (சனி)

* சனிப்பிரதோஷம்

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிவில் விறகு விற்ற திருவிளையாடல்.

* திருவரங்கம் நம்பெருமான், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.

* கீழ்நோக்கு நாள்.

18-ந்தேதி (ஞாயிறு)

* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

19-ந்தேதி (திங்கள்)

* பவுர்ணமி

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

* மேல்நோக்கு நாள்.

Tags:    

மேலும் செய்திகள்