16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்

16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம்

Update: 2022-12-24 18:45 GMT

திருத்துறைப்பூண்டியில் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இந்த ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளிலும், அமாவாசை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பாலபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத அபிஷ்ட வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவடிவேலு, கவுரவ தலைவர் கருணாநிதி, தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் திருத்துறைப்பூண்டி ராமர் கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்