காசா பகுதி தாக்குதல்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரதிநிதிகளுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இடையே நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது.

Update: 2022-08-09 09:06 GMT

நியூயார்க்,

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே, 3 நாட்களாக நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

3 நாட்களாக நடைபெற்ற "ஆபரேசன் பிரேக்கிங் டான்" மூலம், கணிசமான இலக்குகளை எட்ட முடிந்ததாக இஸ்ரேல் கருதுகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதிகள்ல், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் குழு ஆகியோர் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். எகிப்தின் கைரோ நகரில், இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இடையே நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நேற்று நடந்தது.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. மீண்டும் தாக்குதல் தொடங்கினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா கூறியது.

இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் பேசுகையில், இந்த தாக்குதலுக்கான முழு பொறுப்பும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பையே சேரும் என்று குற்றம் சாட்டினார். அவர்கள் காசா பகுதியில் வசிக்கும் மக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். இந்த அமைப்பு போர்க் குற்றங்கள் புரிந்தது. அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டதற்கு அவர்கள் தான் முழு பொறுப்பு என்று கூறினார். மேலும் அவர்கள் இஸ்ரேல் பொதுமக்களை குறி வைத்து ராக்கெட் ஏவுகணைகளை ஏவினர். இது இரட்டிப்பு போர் குற்றமாகும் என்று கூறினார்.இஸ்ரேல் பாலஸ்தீனம் இஸ்லாமிக் ஜிகாத்

இஸ்ரேலுக்கு அமெரிக்க நாட்டின் ஐ.நா பிரதிநிதி ஆதரவாக பேசினார். ஆனால் இதற்கு பாலஸ்தீன தூதர் மறுப்பு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாததால் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்