2022-06-19 23:46 GMT
உக்ரைன் சென்றார் ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர்
நைட் அட் தி மியூசியம் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் ரஷ்ய படையெடுப்பால் சேதமடைந்துள்ள உக்ரைனின் லிவிவ் நகரை பார்வையிட்டார்.
ஐ.நா அகதிகள் முகமையின் தூதுவராக செயல்பட்டு வரும் பென் ஸ்டில்லர், உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு போலந்தில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டவரை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து உக்ரைன் நாட்டின் லிவிவ் நகருக்கு அவர் சென்றார்.