கனடா நாட்டு பிரதமர் பதவிக்கு அனிதா இந்திரா போட்டி

அனிதா இந்திரா அரசியலில் ஈடுபடுவதற்கு முன் டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.;

Update:2025-01-12 08:55 IST

ஒட்டாவா,

கனடா நாட்டின் பிரதமராக, லிபரல் கட்சி தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வருகிறார். சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தற்போது அடுத்தக்கட்டமாக பிரதமர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர். லிபரல் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே அடுத்த பிரதமர் ஆவார் என்பதால் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் பிறந்து கனடாவில் எம்.பி.யாக உள்ள லிபரல் கட்சியை சேர்ந்த சந்திரா ஆர்யா அந்த கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ள மற்றொருவர் அனிதா இந்திரா. இவர் தமிழகத்தின் கோவை வெள்ளலூரை பூர்வீகமாக கொண்டவர். இவரது தந்தைவழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் ஆவார். இந்திய சுதந்திர போராட்டத்தின்போது, காந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அனிதா இந்திராவின் தந்தை டாக்டர் ஆனந்த், தாயார் சரோஜ் மயக்க மருந்து நிபுணராக இருந்தவர்.

அனிதா இந்திராவை பொறுத்தவரை, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக மந்திரியாக பணியாற்றினார். இவர் லிபரல் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் டோர்னட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். வெளிநாடுகளில் புகழ் பெற்ற, இந்திய வம்சாவளியினர் ரிஷி சுனக் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில், 57 வயதான அனிதா இந்திரா உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்