இந்தியாவின் பெரிய பலம் இளம் மாணவர்களிடம் உள்ளது: லண்டனில் ஓம் பிர்லா பேச்சு

நாட்டின் வளர்ச்சியை தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளால் இந்திய மாணவர்கள் முன்னோக்கி கொண்டு செல்கின்றனர் என லண்டனில் ஓம் பிர்லா பேசியுள்ளார்.;

Update:2025-01-12 07:44 IST

லண்டன்,

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், லண்டன் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்களிடம் ஓம் பிர்லா உரையாடினார். அப்போது அவர் பேசும்போது, இன்றைய இந்தியாவின் பெரிய பலம் அதன் இளம் மாணவர்களிடம் உள்ளது என பேசியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியை தங்களுடைய மனப்பான்மை, சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் போட்டி தன்மை ஆகியவற்றால் இந்திய மாணவர்கள் முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். இவற்றை கொண்டு, இந்தியாவுக்கு ஒரு புதிய திறனையும், சக்தியையும் அவர்கள் அளிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களின் திறமை, நம்பிக்கை மற்றும் கண்டுபிடிக்கும் திறன் ஆகியவை அதிகரித்து வருகிறது என்றார். அவர் தொடர்ந்து, ஒரு புறம் உலகில் இளம் தலைமுறையின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஆனால் மறுபுறம் இந்தியாவில், இளைஞர்களின் திறமை அதிகரித்து வருகிறது. இதுவே எங்களுடைய பெரிய பலம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்