பாகிஸ்தான்: நிலக்கரி சுரங்கத்தில் வாயுவெடிப்பு; 4 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் குவெட்டா நகரிலுள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் தொழிலாளர்கள் 8 பேர் சிக்கியுள்ளனர்.;

Update:2025-01-11 08:00 IST

குவெட்டா,

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சஞ்சிதி பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் திடீரென வாயுவெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 27 மணிநேரத்திற்கும் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட இந்த பணியில், இதுவரை 4 பேரின் உடல்களை மீட்பு குழு மீட்டுள்ளது. 3,000 அடி ஆழத்தில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்கள் தவிர, 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்க கூடும் என நம்பப்படுகிறது. பலூசிஸ்தானில் ஹர்னாய் பகுதியில், இதேபோன்றதொரு சம்பவம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்டது. இதில் சுரங்க தொழிலாளர்கள் 18 பேர் சிக்கி கொண்டனர். அவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்