பாகிஸ்தான்: வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான லாரி - 12 பேர் பலி

பாகிஸ்தானில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-01-12 03:13 IST

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கரக் - இந்தோஸ் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் லாரி சென்றுகொண்டிருந்தது. அமிரி சவுக் பகுதியில் சென்றபோது லாரியின் பிரேக் பழுதானது.

இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னே சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. மேலும், சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்