லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா 117-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.;

Update:2022-06-20 05:04 IST


Live Updates
2022-06-20 15:16 GMT

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் முயற்சியை வரவேற்று நடக்க இருக்கும் ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, ரஷியா தாக்குதல்களை அதிகரிக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு ஆற்றின் கரையோரப் பகுதியை ரஷியப்படைகள் இன்று கைப்பற்றின.

2022-06-20 13:19 GMT



கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 117வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிவிரோடோனெட்ஸ்க் அருகே உள்ள மெடோல்கைன் என்ற கிராமம் ஒன்றை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ரஷியா போரை தீவிரப்படுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணையும் முடிவை பற்றிய அறிவிப்புக்காக கீவ் நகரம் காத்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளர்.

உக்ரைனின் துறைமுகங்களை ரஷியா ஆக்கிரமித்து தடுத்து நிறுத்தியதில், தானிய ஏற்றுமதி தடுக்கப்பட்டு உள்ளது. இதனால், சர்வதேச அளவில் உணவு நெருக்கடி ஏற்பட கூடிய அச்சம் அதிகரித்து உள்ளது. இதனால் போர் குற்ற சூழல் ஏற்பட கூடும் என்றும் ஐரோப்பிய யூனியனின் தூதர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும், லக்சம்பர்க்கில் இன்று நடைபெறும் கூட்டம் ஒன்றில் உக்ரைனில் சிக்கி உள்ள லட்சக்கணக்கான டன் தானியங்களை விடுவிப்பதற்கான வழிகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளன.


2022-06-20 12:04 GMT

கீவ்,

நாட்டின் மிகப்பெரிய ரஷிய சார்பு அரசியல் கட்சிக்கு உக்ரைன் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. உக்ரைனின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள ரஷிய சார்பு அரசியல் கட்சியின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சேவைகளில் ரஷியாவிற்கு ஆதரவாக இருப்பதாக அடையாளம் காணப்பட்ட தரப்புகளை தடை செய்ய அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

2022-06-20 08:30 GMT


உக்ரன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது முதல் பயணத்தை உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட தெற்கு முன்னணிப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், ஏனெனில் உக்ரைன் படைகள் மெதுவாக முன்னேறி வருகின்றன.

இந்தநிலையில், மைக்கோலைவ் நகருக்குச் சென்ற அவர், சேதமடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார் மற்றும் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து மேற்கு நகரமான ஒடேசாவிற்கும் விஜயம் செய்தார். கருங்கடல் கடற்கரையை கைப்பற்றும் ரஷியாவின் முயற்சிகளில் இரு நகரங்களும் இலக்குகளாக உள்ளன.

2022-06-20 08:27 GMT


சீவிரோடோனெட்ஸ்க் அருகே உள்ள மெடோல்கினோ கிராமத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை உக்ரைன் இழந்ததாக தகவல்

உக்ரைனின் சீவிரோடோனெட்ஸ்க் நகர் மீது குண்டுவீச்சு மற்றும் வான்வழித் தாக்குதல்களை ரஷியா அதிகரித்துள்ளது, இதுதொடர்பாக லுஹான்ஸ்க் ஒப்லாஸ்ட் கவர்னர் செர்ஹி ஹைடாய் கூறுகையில், “லுஹான்ஸ்க் பகுதி அனைத்து சாத்தியமான ஆயுதங்களுடனும் அழிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

2022-06-20 07:49 GMT


செவரோடோனெட்ஸ்கில் 24 மணி நேரமும் போர் நடைபெறுகிறது - கவர்னர் தகவல்

உக்ரைனின் படைகள் செவரோடோனெட்ஸ்கில் 24 மணி நேரமும் ரஷியாவுடன் போரிட்டுக் கொண்டிருப்பதாக லுகான்சின் கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும் எதிரி படைகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் கவர்னர் செர்ஹி ஹைடாய் தனது டெலிகிராமில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2022-06-20 05:56 GMT

ரஷியா சண்டையை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது,

“இந்த வாரம் ரஷியா போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் என்று நாங்கள் வெளிப்படையாக எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். நாங்கள் தயார்...! கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகளின் புதிய தாக்குதல்களை உக்ரைன் முறியடித்தது.

நாங்கள் தெற்கு உக்ரைன் பகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம், எங்களுடையது அனைத்தையும் திருப்பி பெறுவோம், கருங்கடல் உக்ரேனியர்களுடையதாகவும் பாதுகாப்பாகவும் மாறும். நம் ராணுவம் காத்துக்கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக சேருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக உக்ரைன் காத்திருக்கிறது. அவர்களிடமிருந்தௌ இந்த வார இறுதிக்குள் ஒரு நம்பிக்கையான முடிவை எதிர்பார்க்கிறோம். உக்ரைனுக்கு இதுபோன்ற சில விதிவிலக்கான முடிவுகள் அமைந்து இருப்பதாக” ஜெலென்ஸ்கி கூறினார்.

2022-06-20 04:16 GMT


ரஷியாவின் எரிவாயுவைக் கைவிடுவதற்காக, எகிப்து மற்றும் இஸ்ரேலுடனான எரிசக்தி ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டது.

2022-06-20 00:26 GMT

தற்காலிக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் குறைந்தது 14 பெண்களைக் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக ரஷிய வீரர்களுக்கு எதிராக 19 கிரிமினல் நடவடிக்கைகளை கீவ் தொடங்கியுள்ளதாக உக்ரைனின் துணை வழக்குரைஞர் ஜெனரல் கூறியுள்ளார்.

"ஒவ்வொரு குற்றவாளியும் தண்டிக்கப்பட வேண்டும்," என்று கியுண்டுஸ் மாமெடோவ் ஒரு டுவீட்டில் கூறினார்.

2022-06-20 00:19 GMT

மரியுபோல் உருக்காலையை பாதுகாக்கும் போது ரஷிய படைகளிடம் சிக்கிய உக்ரைன் நாட்டின் முக்கிய தளபதிகள் 2 பேர் விசாரணைக்காக ரஷியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மரியுபோல் உருக்காலையில் பதுங்கி தாக்குதல் நிகழ்த்தி வந்த அசோவ் படைப்பிரிவை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை ரஷிய படைகள் சிறை பிடித்துள்ளன.

அவர்கள் விசாரணைக்காக ரஷியா அழைத்து செல்லப்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் குறித்து உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்