அங்கோலா: காலரா தொற்றுக்கு 12 பேர் பலி
அங்கோலாவில் காலரா தொற்றுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.;
லுவாண்டா,
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலா நாட்டில் காலரா தொற்று பரவி வருகிறது. இதில், கடந்த செவ்வாய் கிழமை முதன்முறையாக தொற்று பதிவு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அடுத்தடுத்து தொற்று பரவி 170 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிய வந்தது.
அவர்களுக்கு நடந்த பரிசோதனையில், 14 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 12 லட்சம் பேர் வசிக்க கூடிய லுவாண்டா மாகாணத்தில் ககுவாகோ புறநகர் பகுதியில் காலரா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், காலரா தொற்றுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.