வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்காவுடன் இணைந்து அணுஆயுத போர் பயிற்சிதென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் தகவல்

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

Update: 2023-01-03 21:45 GMT

சியோல், 

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த 1-ந் தேதி ஜப்பானை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதித்தது வடகொரியா. அதை தொடர்ந்து நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், நாட்டின் அணுஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க உத்தரவிட்டார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில் தென்கொரியா பத்திரிகைக்கு பேட்டி அளித்த அந்த நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் அணுஆயுதங்களை உள்ளடக்கிய கூட்டு போர்ப்பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறினார். ஆனால் ஜோ பைடனிடம் இது குறித்து கேட்டபோது அவர் இல்லை என பதிலளித்தார். அதை மறுத்துள்ள தென்கொரிய அரசு ஜோ பைடனிடம் எந்தவொரு பின்னணி தகவலையும் வழங்காமல் அணுஆயுதங்கள் குறித்து கேள்வி கேட்டதால் அவர் இல்லை என பதிலளித்ததாகவும், அணுஆயுத போர்ப்பயிற்சி குறித்து பேச்சுவார்த்தை நடப்பது உண்மை எனவும் விளக்கமளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்