வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த தகவல்...? சீனா டாக்டர்கள் குழுவை அனுப்புகிறது

வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த தகவலை அறிந்து கொள்ள சீனா டாக்டர்கள் குழுவை வடகொரியாவுக்கு அனுப்புகிறது.

Update: 2020-04-25 11:56 GMT
வாஷிங்டன்

அமெரிக்க ஆதாரங்களின் படி  எந்த உறுதியான தகவலும் இல்லை என்றாலும், கிம் இறந்துவிட்டதாக ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதை தொடர்ந்து வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ளா  சீனா மருத்துவர்கள் குழுவை வட கொரியாவுக்கு அனுப்ப உள்ளதாக ராய்ட்டர்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. 

"வட கொரிய தலைவரின் உடல்நிலை தொடர்பான அறிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வ சேனல்களிலிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை" என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

கிம் கடைசியாக உறுதிப்படுத்தப்பட்ட பொது நிகழ்ச்சியில் ஏப்ரல் 11 அன்று ஒரு பொலிட்பீரோ கூட்டத்தில் கலந்து கொண்டார். இருப்பினும் மறுநாள் அவர் வான்வழி தாக்குதல் பயிற்சிகளில் கலந்து கொண்ட காட்சிகளை நாட்டின் ஊடகங்களும் வெளியிட்டன. அதன் பிறகு கிம்மின் தாத்தா வடகொரியாவின் தந்தை கிம்சுங்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது அவரது உடல் நிலை குறித்த சந்தேகங்களை எழுப்பியது.

 வட கொரிய நாட்டுத் தலைவர் ஏப்ரல் 12 ம் தேதி இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வதந்திகள் பரவியது.

மேலும் செய்திகள்