உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 50 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-09-07 17:57 GMT

கீவ்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 925 நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 பேர் படுகாயமடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்