ஜெர்மனி: பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

ஜெர்மனியில் சவுதி அரேபியா நபர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2024-12-21 14:58 GMT

பெர்லின்,

ஜெர்மனியில் மக்திபர்க் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் நேற்று இரவு குவிந்த மக்கள், பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது, கார் ஒன்றில் விரைவாக வந்த நபர் ஒருவர் அதனை கூட்டத்திற்குள் செலுத்தினார். இதனால், மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என முதலில் தெரிவிக்கப்பட்டது. 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 41 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 86 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 78 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் அடங்கும்.

விபத்து ஏற்படுத்திய நபர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான டாக்டர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த நபர் அகதியாக வந்தவர் என கடந்த 2016-ம் ஆண்டு ஜூலையில் அறியப்பட்டவர். ஜெர்மனியில் வசிப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்