உலக அளவில் 20 ஆயிரம் பலி எண்ணிக்கையை கடந்த 4வது நாடு பிரான்ஸ்

உலக அளவில் பலி எண்ணிக்கையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலாக கடந்த 4வது நாடாக பிரான்ஸ் உள்ளது.

Update: 2020-04-21 01:28 GMT
பாரீஸ்,

உலக நாடுகளில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு வளர்ந்த நாடுகள் அதிகம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் அதிகம் இலக்காகி உள்ளன.  அந்நாடுகளில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை ஆகியவை அதிகளவில் உள்ளன.

பிரான்ஸ் நாட்டில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 383 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.  20 ஆயிரத்து 265 பேர் பலியாகி உள்ளனர்.  இதுவரை 37 ஆயிரத்து 409 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அந்நாட்டில், நேற்று ஒரே நாளில் 2,489 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  547 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் உலக அளவில் பலியானோர் எண்ணிக்கையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலாக கடந்த 4வது நாடாக பிரான்ஸ் உள்ளது.

இந்த வரிசையில், அமெரிக்கா (42,514), ஸ்பெயின் (20,852) மற்றும் இத்தாலி (24,114) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையிலும் இந்த நாடுகள் இதே வரிசையில் உள்ளன.

மேலும் செய்திகள்