உலக சுகாதார அமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி சீரமைக்க வேண்டும்- அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி சீரமைப்பு செய்யவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-04-17 02:43 GMT

வாஷிங்டன்

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் விவாதித்தனர். அப்போது உலக சுகாதார அமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி சீரமைப்பு செய்யவேண்டும் என அப்போது அமெரிக்கா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

உலக சுகாதார அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்ததற்கு ஜி 7 நாடுகள்  ஆதரவு தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

முன்னதாக கொரோனா விஷயத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும் சீனாவில் பரவும் கொரோனா குறித்த உண்மைகளை உலக சுகாதார அமைப்பு மறைப்பதாகக் கூறிய டிரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் செய்திகள்