பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-25 13:41 GMT
லாகூர்,

2017-ம் ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில் ஒன்றான அல் அசீசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஷெரீப்பின் உடல்நிலையை கருத்தில் கொண்டு லாகூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்த  நவாஸ் ஷெரீப்  உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.  நவாஸ் ஷெரீப்  உடலில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்