அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார்

அமேசான் நிறுவன பங்குகளின் மதிப்பு குறைந்ததையடுத்து, அந்நிறுவன தலைவர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார்.

Update: 2019-10-25 11:14 GMT
வாஷிங்டன்,

கடந்த ஆண்டு, 160 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசாஸ், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இந்நிலையில் நேற்று, அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7 சதவீதம் குறைந்தது. எனவே ஜெஃப் பெசாஸின் சொத்து மதிப்பும் 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்ததுள்ளது. 

இதனால் ஜெஃப் பெசாஸுக்கு முன்பு 24 ஆண்டுகளாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட்டின் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தற்போது அந்த இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 105.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

மேலும் செய்திகள்