”கிக்கி சேலஞ்ச்" விபரீத செயலை முயற்சி செய்த இளம் பெண் கவலைக்கிடம்

"கிக்கி சேலஞ்ச்" என்றழைக்கப்படும் ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடும் விபரீத செயலை முயற்சி செய்த பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. #KikiChallenge

Update: 2018-08-01 11:32 GMT
சமூகவலைத்தளங்களில் ஒவ்வொரு சமயத்தில் ஏதேனும் ஒரு செயல் மிகவும் வைரலாக நெட்டிசன்களால் பரப்பப்படுகிறது. அதனை மக்களும் ஏற்று செயல்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வரும் "கிக்கி சேலஞ்ச்" என்ற முறை பிரபலங்கள் துவங்கி, பொதுமக்கள் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஓடும் காரிலிருந்து வெளியில் இறங்கி, இன் மை பீலிங் என்ற  பாடலிற்கு அந்த நபர் நடனமாட வேண்டும் எனபதுவே அந்த சேலஞ்ச்.

அதுமட்டுமின்றி, ஒரு வினோத விளையாட்டாகவும் மாறி உள்ளது. வினோத விளையாட்டாக மட்டும் இருந்தால் பரவாய் இல்லை. அது விபத்து விளையாட்டாக, மரண விளையாட்டாக மாறி வருவதுதான் அவலம்.

‘இன் மை பீலிங்ஸ் கிகி சேலஞ்ச்’ என்ற பெயரில், ‘இன் மை பீலிங்ஸ்’ பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டுக்கொண்டு, ஓடும் காரில் இருந்து இறங்கி நடுரோட்டில் உற்சாகமாக நடனம் ஆடிவிட்டு, மீண்டும் வாகனத்தில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள்.

இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தாங்கள் சவாலை செய்து முடித்து விட்டதாக பெருமிதம் கொள்கின்றனர்.

ஆனால் சிலர் விபத்துக்கு ஆளாகின்றனர். படுகாயம் அடைகின்றனர். அதை பார்த்தும் யாரும் திருந்தியபாடில்லை என்பதுதான் சோகம்.

இந்த முறையினை அமெரிக்காவின் லோவா நகரத்தில் வசித்து வரும் அன்னா ஓர்டன்  (18) என்ற இளம்பெண் முயற்சி செய்துள்ளார். 

அப்பொழுது எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்த அன்னாவின்  தலைப்பகுதியில் பலத்த காயமடைந்துள்ளது. மண்டை ஓட்டில் ஏற்பட்ட காயத்தில் காது மற்றும் தலையிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. இதனையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்னா தற்போது குணமடைந்து மெதுவாக மீண்டும் நடக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்