உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோவில்தெப்பக்குளத்தில் புதிதாக பதிக்கப்பட்ட கற்கள் சரிந்தது:விரைந்து சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் புதிதாக பதிக்கப்பட்ட கற்கள் சரிந்தது. அதனை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-06 18:45 GMT

உத்தமபாளையத்தில் திருக்காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ராகு -கேதுக்கு தனியாக சன்னதி உள்ளது. இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் சுமார் 90 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. இதனால் தெப்பக்குளம் சிதிலம் அடைந்து இருந்தது.

இதையடுத்து சிதிலம் அடைந்த தெப்பம் சீரமைக்கப்பட்டது. அப்போது தெப்பத்தின் கரையோர சுவர்களில் கற்கள் பதிக்கப்பட்டது. ஆனால் பணி நடந்த முடிந்த சில மாதங்களிலேயே தெப்பத்தில் புதிதாக பதிக்கப்பட்டிருந்த கற்கள் சரிந்து கீழே விழுந்தன. எனவே அதனை விரைவாக சீரமைத்து தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்