வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சுழி,
திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நிலைய அலுவலர் மாதவன் தலைமையில் உயிர் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதிலும் பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் உயிரிழந்த வீரர்களின் வீர மரணத்தை போற்றும் வகையில் நிலையஅலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மவுன அஞ்சலி ெசலுத்தினர்.