ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பா.ஜ.க.வினர் அஞ்சலி

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பா.ஜ.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-06-06 18:45 GMT

ராமேசுவரம், 

ஒடிசாவில் ரெயில்கள் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனிடையே ஒடிசா ரெயில் விபத்தில் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ராமேசுவரத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் நகர் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் பவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவி, நகர் பொருளாளர் சுரேஷ், ஓ.பி.சி. அணிநகர் தலைவர் சங்கிலி முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அக்னி தீர்த்த கடலில் இறங்கி நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்