நான் இப்போது சிக்கலான புள்ளியில் நின்று கொண்டிருக்கிறேன்: திருமாவளவன்

பிரச்சினைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறோம் என்று திருமாவளவன் கூறினார்.

Update: 2024-09-20 03:04 GMT

திருச்சி,

திருச்சியில் நடைபெற்ற விசிகவின் கலந்துரையாடல் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

மதுஒழிப்பு பிரச்சினையை பொது பிரச்சினையாக பார்க்கத் தெரியாத ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு கருத்தை சொன்னால், அது அரசியலாகத்தான் இருக்கும் என்று முடிவு எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது நான் சிக்கலான புள்ளியில் நின்று கொண்டிருக்கிறேன். மது ஒழிப்பை 100 சதவீத தூய நோக்கத்தோடு, சமூகப் பொறுப்போடு தொலைநோக்கு பார்வையோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுத்திருக்கிறது.

கூட்டணி கட்சியாக இருந்தாலும் பிரச்சினைகளை நாங்கள் துணிந்து பேசுவோம். ஈழத் தமிழர்களுக்காக அதிமுகவோடு பயணித்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள். ஆனால் திமுகவோடு இணைந்து பயணிப்பது என முடிவெடுத்து அதன் கூட்டணியில் பயணித்தோம். ஆளுங்கட்சிக்கு நெருடலை தரக்கூடிய வகையில் நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை.

பிரச்சினைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் சிலர் கூட்டணியை விட்டு வெளியே வருவதற்காக என பேசுகின்றனர். தொடக்கத்தில் இருந்து நான் சொல்லி வருகிறேன். தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அதற்கான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்