போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 15 பேர் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 15 பேர் இடமாற்றம்

Update: 2023-03-11 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் 15 பேர், மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தனபால் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 2-க்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் மாவட்ட தலைமையக தனிப்பிரிவு அலுவலகத்திற்கும், வெள்ளிமேடுபேட்டை ஏ.செல்வக்குமார் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 1-க்கும், திண்டிவனம் சீத்தாபதி வெள்ளிமேடுபேட்டைக்கும், ரோஷணை சீனிவாசன் வானூருக்கும், விக்கிரவாண்டி கருணாநிதி காணைக்கும், திருவெண்ணெய்நல்லூர் ராபர்ட் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 6-க்கும், கண்டமங்கலம் கே.செல்வக்குமார் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 8-க்கும், அரகண்டநல்லூர் ஜோசப்ரவி கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடிக்கும், கெடார் கந்தசாமி கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடிக்கும், வளவனூர் சின்னப்பன் அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடிக்கும், செஞ்சி பூமிநாதன் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 4-க்கும், சத்தியமங்கலம் ராஜமன்னார் அரகண்டநல்லூருக்கும், கண்டாச்சிபுரம் ஞானகுமார் பெரியதச்சூருக்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய செந்தில்விநாயகம் திருவெண்ணெய்நல்லூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்