விவசாய இடுபொருள் விற்பனையாளர்களுக்கு பயிற்சி

விவசாய இடுபொருள் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-23 18:37 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது மக்காச்சோளம் மற்றும் பருத்தி விதைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி விவசாய இடுபொருள் விற்பனையாளர்களுக்கு விதை மற்றும் உரம் உபயோகம் குறித்த பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் கீதா தலைமை தாங்கி கூறுகையில், இடுபொருள் விற்பனையாளர்கள் விதைகள் மற்றும் உரங்கள் முறையாக விற்பனை செய்து விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்களை வழங்கி அதிக மகசூல் பெறுவதற்கு உதவி புரிய வேண்டும் என்றார். இதையடுத்து, விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் மற்றும் விதை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் விவசாயிகள் தங்களது வயல்களில் அடிஉரமாக சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி. மற்றும் கூட்டு உரங்களை பயன்படுத்த வேண்டும். மேல் உரமாக யூரியாவுடன் பொட்டாஷ் அல்லது கூட்டு உரங்களை இட வேண்டும். மேலும், நானோ யூரியா, நானோ டி.ஏ.பி., உயிர் உரங்கள் ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்தி உரங்களின் அளவை குறைத்து அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்