ஈரோட்டில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை - குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
ஈரோட்டில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோட்டில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தாளவாடி பகுதியில் ஓடையின் குறுக்கே உள்ள பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மழைநீர் வடிகால்களை சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.