கன்னியாகுமரியில் 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும் - வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவிப்பு
சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். முதல் மூன்று விவசாயிகளுக்கு பாராட்டுப்பத்திரத்துடன் பணப்பரிசும் வழங்கப்படும்
12,500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படும்
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக ஆய்வகம் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்