மண் வளத்தை காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் மண் வளத்தை காக்க 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
2 ஆயிரத்து 482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ. 6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துடன் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
பயிற்சி பெற்ற பண்ணைமகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ், களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி ஒதி ஒதுக்கீடு செய்யப்படும். பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கை வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும். நிரந்தர மண்புழு உரத்தொட்டி, உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும். - அமைச்சர் பன்னீர்செல்வம்
2023-24ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.