நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு

நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (வயது 56) உயிரிழந்து உள்ளது.;

Update:2025-01-12 10:03 IST

நெல்லை,

நெல்லையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளது. 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோவிலுக்கு யானை நன்கொடையாக கொடுக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் காந்திமதி யானை முன்னே செல்ல திருவிழா விமரிசையாக நடைபெறும்.

கடந்த ஒரு மாத காலமாக யானை காந்திமதி படுக்காமல் நின்றவாறே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில், மீண்டும் அதனால் எழ முடியவில்லை.

இதனால் உடனடியாக அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து யானை காந்திமதிக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து கிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று உயிரிழந்து உள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்