கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.;
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்கு வேண்டிய பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது. அதில், பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.
இதற்காக கரும்பு 250 லாரிகளிலும், மஞ்சள், இஞ்சி 94 லாரிகளிலும் வந்துள்ளன. கரும்பு கட்டு ஒன்று 15 வீதம் 400 முதல் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, தலா 10 எண்ணிக்கையில் இஞ்சி கட்டு ரூ.100, மஞ்சள் கட்டு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.