2024-25ம் ஆண்டில் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ 22 இனங்களுடன் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும். -அமைச்சர் பன்னீர்செல்வம்.
கரும்பு உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வேளாண் பட்ஜெட்
கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பெருமழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவில் 208.20 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
பயிர் இழப்பீடு தொகையாக 25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,436 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
2022-23ம் ஆண்டில் 95.39 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற்ற பயிர் பரப்பாக உயர்ந்துள்ளது.- அமைச்சர் பன்னீர்செல்வம்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
-என்ற என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசிக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது . வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு, 38,904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.