வேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்... என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசிக்கிறார்.;
சென்னை,
நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில், 50,000 ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத்தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓட்டைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க 9.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர்
32.90 கோடி ரூபாய் மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை மந்திரி எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பருத்தி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு 14.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு
எள் சாகுபடிப் பரப்பு விரிவாக்க திட்டம்
மகசூலை அதிகரிக்க, எள் சாகுபடிப் பரப்பு விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
வீட்டுத் தோட்டத்தில் பழங்கள், காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்க வாழை, முருங்கை செடிகள் வழங்கப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க 6.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்